மீஞ்சூர் அருகே மழைநீர் கசியும் நிலையில் சிதில மடைந்து காணப்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடத்தை சீர மைத்து தரவேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன் றியம், ஏலியம்பேடு ஊராட் சிக்கு உட்பட்ட கிராமம் கனகம் பாக்கம். இக்கிராமத்தில் இயங் கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை, சிறுமழை பெய் தால்கூட மழைநீர் கசியும் அவல நிலையில் உள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, கனகம் பாக்கம் பொதுமக்கள் கூறிய தாவது: கனகம்பாக்கம் மற்றும் திருப்பேடு கிராமங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் குழந் தைகள் கனகம்பாக்கம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆரம்ப கல்வி பெறுகின்றனர். தற்போது 14 மாணவர்கள், 16 மாணவிகள் என 30 பேர் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி இயங்கி வரும் பழமையான கட்டிடத்தின் மேற் கூரை, பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதனால், ஓடுக ளால் ஆன மேற்கூரை வழியே, சிறுமழை பெய்தால் கூட மழைநீர் கசிந்து, வகுப் பறைகளில் மழைநீர் தேங்கு வது வாடிக்கையாக உள்ளது. அவ்வப்போது, பள்ளிக் கட்டி டத்தை ஊராட்சி ஒன்றிய நிர் வாகம் பழுது பார்த்தும் பலனில்லை. அதுமட்டுமல்லா மல், பள்ளியை சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், மாணவ- மாணவி களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது. மாணவ- மாணவிகள் விளையாட போதிய இடவசதியும் இப்பள் ளியில் இல்லை. இதனால், கனகம்பாக்கம் மற்றும் திருப் பேடு கிராமங்களைச் சேர்ந்த வர்கள் பலர் தங்கள் குழந்தை களை கவரப்பேட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
உடனடியாக மேற்கூரையை தற்காலிகமாக சீரமைத்து தருவ தோடு, நிரந்தர தீர்வாக கான் கிரீட் மேற்கூரையை அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, “மாவட்ட நிர் வாகத்தின் கவனத்துக்கு இந்த பிரச்சினையை கொண்டுச் சென்று உரிய நடவடிக்கை’’ எடுப்பதாக உறுதியளிக்கப் பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago