‘மக்னா’ யானையுடன் இணை சேரும் ‘கல்பனா’

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் முது மலை தெப்பக்காட்டிலுள்ள யானை கள் வளர்ப்பு முகாமில், 25 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் முக்கியத் துவம் வாய்ந்தது மூர்த்தி என்ற தந்தம் இல்லாத மக்னா யானை.

கேரளாவில் 17 பேரை கொன்றதால், இந்த யானையை சுட்டுக் கொல்ல அந்த மாநில வனத்துறை உத்தரவிட்டது. ஆனால், அப்போது முதுமலை சரணாலய காப்பாளராக இருந்த உதயன் தலைமையிலான வனத் துறையினர், யானையை முதுமலை கொண்டு வந்தனர். படுகாயமடைந்திருந்த மக்னா யானைக்கு, மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை அளித்து தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பக யானைகள் முகாமில் உள்ள கல்பனா என்ற பெண் யானை, தந்தம் உள்ள ஆண் யானைகளுடன் பாராமுகமாக இருந்து வருவதால், அதற்கு குட்டி பிறக்கவில்லை. இதுகுறித்து ஆலோசித்த வனத்துறையினர், கல்பனாவை முதுமலையிலுள்ள மூர்த்தியுடன் இணை சேர்க்க முடிவு செய்தனர். இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் ஆனைமலையில் இருந்து முதுமலைக்கு கல்பனா கொண்டுவரப்படவுள்ளது.

இதுகுறித்து முதுமலை வனத் துறையினர் கூறும்போது, “ஆனைமலையில் உள்ள பெண் யானை (கல்பனா), தந்தமுள்ள யானைகளுடன் இணை சேர மறுக்கிறது. கல்பனாவின் அச்சத்தைப் போக்க, தந்தம் இல்லாத ஆண் யானை மூர்த்தியுடன் இணை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதன்மூலமாக கல்பனாவுக்கு குட்டி பிறக்க அதிக வாய்ப்பு உள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்