ஒருவர் எதற்காக உழைக்கிறார்? மகிழ்ச்சியாக வாழ்வதற்காக! ஆனால், நாள் முழுக்க உழைத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி எப்படி கிடைக்கும்?
அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர் களுக்கும், பெரும்பாலான தொழில் நிறுவனங்களிலும் 8 மணி நேரம்தான் வேலை நிர்ணயிக்கப்பட் டிருக்கிறது. அதற்கேற்ப ஊதிய மும் தரப்படுகிறது. இந்த 8 மணி நேர வேலை என்பதும், அதற்கேற்ற ஊதியம் என்பதும் எங்கே, எப்போது, எதற்காக, எப்படி நிர்ணயிக்கப்பட்டது?
18-ம் நூற்றாண்டின் இறுதியி லும் 19-ம் நூற்றாண்டின் தொடக் கத்திலும் மேற்கத்திய நாடுகளில் தினமும் 12 முதல் 18 மணி நேரமும், சில சமயங்களில் 20 மணி நேரமும் தொழிலாளர்கள் வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கமும், அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்களும், பென்சில் வேனியா நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், ரயில்வே தொழிலாளர்களும் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து போராடினர். 1832-ம் ஆண்டு பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமெரிக் காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங் களும், சிறு வணிகர்கள் கூட்டமைப் பும் இணைந்து 1884-ம் ஆண்டு “ஃபெடரேஷன் ஆஃப் ஆர்கனைஸ்டு டிரேடர்ஸ் அண்ட் லேபர் யூனியனை” உருவாக்கினர். இந்தக் கூட்டமைப்பு 8 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து ஒரு தீர்மானத்தை நிறை வேற்றியது. இது தொழிலாளர் ஒற்றுமைக்கு பெரிய அளவில் வழிவகுத்தது. இந்தக் கூட்ட மைப்பு,1886 மே 1-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் பிறப்பதற்குக் காரணம்.
தொழிலாளர்களின் போர்க்குரல்
இதையடுத்து 1889 ஜூலை 14-ம் தேதி பாரீஸில் கூடிய சோசலிஷ தொழிலாளர்களின் சர்வதேச தொழி லாளர் பாராளுமன்ற மாநாட்டில், கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேரப் பணிக்கான போராட்டத்தைத் தொடர்வது என்றும், 1890, மே 1 அன்று சர்வதேச அளவில் தொழி லாளர் இயக்கங்களை நடத்த வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது. உலகத் தொழிலா ளர்கள் அனைவரும், 8 மணி வேலை நேரத்துக்காக போர்க்குரல் கொடுக்க வேண்டிய நாள் மே 1 என்று அறிவிக்கப்பட்டது.
1888-ம் ஆண்டு செயின்ட் லூயிஸ் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு அதன் தலைவர் சாமுவேல் கோம்பரஸ் தலைமை யில் கூடியது. இதையடுத்து 8 மணி நேர வேலை இயக்கத்துக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது.
சிகாகோ போராளிகளின் தியாகமும், அமெரிக்கத் தொழிலா ளர்களின் போராட்டமும்தான் 8 மணி நேர வேலைக்கு அடித்தளமிட்டன. இவையே உழைப்பாளர்களின் தினமாக நம் முன் நிற்கிறது.
இன்றைய சூழலில் மே தினம் குறித்து தொழிற்சங்கத் தலைவர்கள் என்ன கூறுகிறார்கள்?
தொமுச பேரவை பொதுச் செயலா ளர் மு.சண்முகம்:
பல்வேறு உயிர் தியாகங்களால் போராடிப்பெற்ற 8 மணி நேர வேலை என்பது மெல்ல மெல்ல 12 மணி நேர வேலையாக மாறிக்கொண்டிருக்கிறது. படித்து விட்டு வேலைக்குச் செல்லும் இளைஞர்களிடம் பணி தொடர் பான விழிப்புணர்வு இல்லை. ஒப்பந்த முறையால் பணி தரமான தாக இல்லை. இந்த முறையை அறவே நீக்கவேண்டும் என்று போராடி வருகிறோம் என்றார்.
சிஐடியு மாநில பொதுச் செயலா ளர் ஜி.சுகுமார்: எண்ணற்ற தொழி லாளர்களின் தியாகங்களினால் போராடி பெறப்பட்ட 8 மணி நேர உழைப்பு உரிமை தற்போது மெல்ல நிர்மூலமாகிக் கொண்டிருக்கிறது. அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் காலகாலமாக நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் அனைத்தும் அவுட் சோர்ஸிங் எனும் முறையால் நிர்மூலமாக்கப்பட்டு வருகிறது. எனவே, மீண்டும் தேவை ஃபெடரேஷன் ஆஃப் ஆர்கனைஸ்டு டிரேடர்ஸ் அண்ட் லேபர் யூனியன். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுத்த தினத்தை பள்ளிப் பருவம் முதலே சொல்லித் தரவேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago