திருவள்ளூர் மாவட்டத்தில் பூத்துக் குலுங்கும் சாமந்தி: நல்ல விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி

By இரா.நாகராஜன்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சாமந்தி செடிகளில் சாமந்திப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. நல்ல விளைச்சல் காரணமாக இந்தாண்டு கணிசமான லாபம் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக் கோட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட வட்டங்களில் மல்லிகை, சம்பங்கி, ரோஜா, சாமந்தி, முல்லை உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை பயிரிடப்பட்ட சாமந்தி செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளன. வயல் வெளியில் இந்த சாமந்தி செடிகள் மஞ்சள் போர்வையை போர்த்தியது போல காட்சியளிக்கின்றன.

இதுகுறித்து, பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்ட திருப்பேடு வைச் சேர்ந்த விவசாயி கோவிந் தராஜ் தெரிவித்ததாவது: திருவள் ளூர் மாவட்டத்தில் 150 ஏக்கருக்கும் மேல் சாமந்திப்பூக்கள் ஆண்டுத் தோறும் சாகுபடி செய்யப்படுகிறது. பொன்னேரி வட்டத்தில் உள்ள திருப்பேடு, கனக்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 80 ஏக்கரில் சாமந்தி பயிரிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் இருந்து, சாமந்தி நாற்றுகளை வாங்கி வந்து பயிரிட் டுள்ளோம். பூத்துக் குலுங்கும் சாமந்திப்பூக்களை, ஒரு நாள் அல்லது இரண்டு நாள் விட்டு, பறித்து, கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

சாமந்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள ராமச்சந்திரன் என்ற விவசாயி தெரிவித்ததாவது: சாமந்திப் பூக்கள் நல்ல வருவாயை தருகிறது. கடந்த ஆண்டு முக்கால் ஏக்கர் நிலத்தில் சாமந்திப் பூக்களை பயிரிட்டேன். இந்தாண்டு ஒன்றே கால் ஏக்கரில் பயிரிட்டுள்ளேன். தற்போது, அறுவடை காலம் என்பதால் பூக்களை பறித்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் ஏக்கருக்கு 100 கிலோ முதல், 150 கிலோ வரை பூக்களை பறிக்கி றோம். அறுவடையின் முடிவில் சராசரியாக ஏக்கருக்கு 6 டன்னுக்கு மேல் சாமந்திப் பூக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

கோயம்பேடு சந்தையில் சாமந்திப் பூக்களை தற்போது ரூ.10 முதல் ரூ.30 வரை கொள்முதல் செய்கின்றனர். கடந்த ஆண்டு ரூ.40 முதல் ரூ.60 வரைக் கூட கொள்முதல் நடந்தது. சாகுபடி முடிவடைய இன்னும் 2 மாதங்கள் உள்ளதால் கடந்த ஆண்டை போலவே கொள்முதல் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்