‘தண்ணீர் தட்டுப்பாடுள்ள நாடாக இந்தியா மாறிவிடும்’: விவசாயிகள் பயிற்சி முகாமில் தகவல்

‘நீர்ப்பாசனத்துக்காக சுமார் 70% நீரும், அத்தியாவசியத் தேவைக்காக 80% நீரும் நிலத்தடி நீரிலிருந்துதான் எடுக்கப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா தண்ணீர் தட்டுப்பாடுள்ள நாடாக மாறிவிடும்’ என்று கோவையில் நடந்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.

கோவை வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

விவசாயத்துக்கு பயன்படும் பல்வேறு இயந்திரங்களின் பயன்பாட்டினையும், எந்தெந்த கருவிகளை தேவைக்கேற்ப வாங்கி உபயோகிக்க முடியும் என்பதையும் தமிழக வேளாண் பொறியியல் துறையினர் எடுத்துரைத்தனர்.

மழைநீர் சேகரிப்பு பற்றிய அமர்வில், காவிரி நீர் அறக்கட்டளை நிறுவனர் ஐயப்பன் மசாகி பேசியதாவது: நீர்ப்பாசனத்துக்காக சுமார் 70 சதவீதம் நீரும், அத்தியாவசியத் தேவைக்கான 80 சதவீத நீரும் நிலத்தடி நீரிலிருந்துதான் எடுக்கப்படுகிறது.

ஆனால், இந்த நிலத்தடி நீரோ குறைந்துகொண்டே வருகிறது. ஆழ்துளை கிணறுகள் அதிகமாக தோண்டப்படுகின்றன, நாம் அவற்றிலிருந்து நீரை உறிஞ்சி எடுத்துக்கொண்டே இருக்கிறோமே தவிர மறுபடியும் நீரை பூமிக்கு தருவதில்லை.

இதே நிலை தொடர்ந்தால், 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா தண்ணீர் தட்டுப்பாடுள்ள நாடாகத் தான் இருக்கும். இந்த பிரச்சினையை எதிர்கொள்ள, வெள்ளியங்கிரி உழவன் நிறுவனம் கர்நாடகாவின் நீர் அறிவு அறக்கட்டளையுடன் கைகோர்த்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 25 வருடங்களாக மழைநீர் சேகரிப்புக்காக தீவிரமாக செயலாற்றி வருகிறார் மசாகி. இவர் 22 மாநிலங்களில் 600-க்கும் மேற்பட்ட செயற்கை ஏரிகளை உருவாக்கியுள் ளார். வெள்ளியங்கிரி உழவன் நிறுவனம், நீர் அறிவு அறக்கட்டளை இணைந்து, மழை நீர் சேமிப்பை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கொண்டு செல்ல விருக்கிறது. இந்த திட்டத்தை செயல் படுத்தும் உத்திகளையும் விவசாயி களுக்கு கற்றுக் கொடுக்க உள்ளது என்று வெள்ளியங்கிரி உழவன் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்