மோடி பதவியேற்பு விழாவில் ரஜினி சார்பில் பங்கேற்றார் மகள் ஐஸ்வர்யா?

By ஸ்கிரீனன்

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற விழாவில், நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவருடைய மகள் ஐஸ்வர்யா தனுஷ் கலந்துகொண்டதாக தெரிகிறது.

மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள, நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் பங்கேற்கவில்லை.

அந்த விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்துகொள்வதால், ரஜினி பங்கேற்கக் கூடாது என்று ரஜினி வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் காரணமாக, அவ்விழாவில் பங்கேற்பதை ரஜினிகாந்த் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதேவேளையில், கர்நாடகாவில் 'லிங்கா' படப்பிடிப்பில் கலந்துகொண்டதால், மோடி பதவியேற்பு விழாவில் ரஜினி பங்கேற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்தச் சூழலில், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ், மோடி பதிவியேற்பு விழாவில் நேற்று கலந்துகொண்டார். இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் குறிப்பிடும்போது, "டெல்லியில் நரேந்திர மோடி அங்கிள் பிரதமராக பதவியேற்ற நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்டேன். அவருக்கு பொன்னாடை அணிவித்து, அவரது வாழ்த்துகளைப் பெற்றேன். அது, மகிழ்ச்சிக்குரிய தருணம். இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்" என்று ஐஸ்வர்யா ட்வீட்ட்யிருக்கிறார்.

மோடி பதவியேற்பு விழாவில் ரஜினி சார்பில்தான் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் கலந்துகொண்டதாக, ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்