டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலை.யில் 2,675 மாணவ, மாணவியருக்கு பட்டம்

டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன்சாவடி ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏ.சி.எஸ்.கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.

அப்போது தேர்வில் வெற்றி பெற்ற 2,675 இளநிலை, முதுநிலை மற்றும் பிஎச்.டி. மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக் கழக மானியக்குழு துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் தலைமை விருந்தினராக பங் கேற்று பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தி, முனைவர் பட்டங்களை யும் அனைத்து துறைகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு பதக்கங் களையும், பட்டங்களையும் வழங்கினார்.

பல்கலைக்கழகத்தின் தலை வர் ஏ.சி.எஸ்.அருண்குமார் தலைமை தாங்கினார். துணை வேந்தர் கே.மீர் முஸ்தபா உசேன், செயலாளர் ஏ.ரவிக்குமார், துணைத் தலைவர் (நிர்வாகம்) ஆர்.எம்.வாசகம், துணைத் தலை வர் (கல்வி) பி.டி.மனோகரன், செயல் இயக்குநர் ஜி.சி.கோதண் டன் மற்றும் இணை துணை வேந்தர் சி.எஸ்.ஜெயச்சந்திரன் ஆகியோரும் கலந்துகொண் டனர். இவ்வாறு பல்கலைகழக பதிவாளர் சி.பி.பழனிவேலு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்