ஆரஞ்ச் ஒளியில் மின்னிய 10 கட்டிடங்கள்

மல்டிபல் ஸ்கிளிரோசிஸ் என்ற நரம் பியல் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னையில் 10 கட்டிடங் களில் ஆரஞ்ச் நிற விளக்குகள் தொங்கவிடப்பட்டிருந்தன.

மே 27-ம் தேதி உலக மல்டிபல் ஸ்கிளிரோசிஸ் தினமாகும். மல்டிபல் ஸ்கிளிரோசிஸ் என்பது நரம்புகளை பாதிக்கும் நோயாகும். இதனால் மூளையின் செயல்பாடு வெகுவாக பாதிப்படையும். கண் பார்வை குறைபாடு, தசை தளர்ச்சி, மிகுதியான உடல் அயர்வு உள்ளிட்டவை இதனால் ஏற்படும்.

இந்திய மல்டிபல் ஸ்கிளிரோசிஸ் சங்கத்தின் சென்னைப் பிரிவின் முயற்சியால் சென்னையில் ரிப்பன் மாளிகை, காமராஜர் சாலையில் காவல் டிஜிபி அலுவலகம், சென்னை ஐஐடி வளாகம், நுங்கம் பாக்கத்தில் உள்ள இஸ்பஹானி வணிக வளாகம் உள்ளிட்ட 10 கட்டிடங்களில் இரண்டாவது ஆண் டாக நேற்று ஆரஞ்ச் நிற விளக்குகள் தொங்கவிடப்பட்டிருந்தன. இந்த நோயை அடையாளப்படுத்தும் நிறமாக ஆரஞ்ச் நிறம் உள்ளதால், இந்நோய் குறித்த விழிப்புணர்வுக்காக ஆரஞ்ச் நிற விளக்குகள் பயன்படுத்தப்பட்டன.

இது குறித்து இந்திய மல்டிபல் ஸ்கிளிரோசிஸ் சங்கத்தின் சென் னைப் பிரிவின் செயலாளர் ஆன் கொன்சால்வெஸ் கூறும்போது, “இந்த நோய் குறித்த விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது. தமிழ்நாட் டில் எங்களிடம் இது வரை 200 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். ஆனால், நிச்சயமாக அதை விட அதிகமானோர் பாதிக்கப்பட் டிருப்பார்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்