பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்: போட்டி பொதுக்குழுவில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் 10 பேர் ஊழல் புரிந்த தாக விளம்பர தட்டி வைத்த துடன், அவர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை லஞ்ச ஒழிப்புத்து றையிடம் பொதுப்பணித்துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் வழங்கினர். இதனால், பொதுப் பணித்துறை பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இடையில் மோதல் ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு ஒப்பந்ததாரர்கள் சங்கத்தை சேர்ந்த 59 பேர் பொறியாளர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளி யிட்டனர். இதையடுத்து, சங்கத்தில் பிளவு ஏற்பட்டது.

இந்நிலையில், பொறியாளர் ஆதரவு ஒப்பந்ததாரர்கள் நேற்று காலை சேப்பாக்கம் பொதுப்பணித்துறை வளாகத்தில் கூடி போட்டி பொதுக்குழு கூட்டத்தை நடத்தினர். அப் போது, சங்கத் தலைவராக ஜி.ஏகாம்பரம் உள்ளிட்ட 12 தற்காலிக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 3 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

ஒப்பந்ததாரர்கள் சங்க பொறுப்பாளர்கள் சிலர், பொதுப் பணித்துறை பொறியாளர்கள் ஊழல் புரிந்ததாக ஊடகங்கள் மூலம் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது. தற்போதைய பொறுப்பாளர்கள் அனைவரும் சங்கப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகின்றனர். முறையாக தேர்தல் நடத்தி புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்காலிக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர் என தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் ஒப்பந்ததாரர் சங்க அலுவலகத்துக்கு புதிய நிர்வாகிகள் பூட்டு போட்டனர். இதுகுறித்து சங்கத்தின் தற்காலிக தலைவர் ஏகாம்பரம் கூறும்போது, ‘‘விரைவில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். தற்போது சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டு, பொதுப்பணித்துறையிடம் சாவியை ஒப்படைத்துள்ளோம். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதும் சங்க அலுவலகத்தை நாங்கள் பயன்படுத்துவோம்’’ என்றார்.

சங்கத்தின் தலைவர் குணமணியிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். எங்கள் மீது நம்பிக்கையில்லாவிட்டால், சட்டப்படி 15 நாட்களுக்கு முன்பு கடிதம் தரவேண்டும். அப்படி எந்தக் கடிதமும் தரவில்லை. சங்க அலுவலகத்தை பூட்ட அவர்களுக்கு அதிகாரம் இல்லை. 24-ம் தேதி இதுகுறித்து இறுதி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்