கொடைக்கானலில் படகு போட்டி

கொடைக்கானல் கோடை விழா கடந்த 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொடைக்கானல் ஏரியில் படகு அலங்காரப் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் தோட்டக் கலைத் துறை, மீன்வளத் துறை, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், சுற்றுலாத் துறை மற்றும் கொடைக்கானல் துடுப்புப்படகு சங்கம் ஆகியன சார்பில் மலர்கள், பிளாஸ்டிக் மற்றும் காகித அட்டைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட 5 படகுகள் பங்கேற்றன.

போட்டி தொடங்கியதும் மேளதாளங்கள் முழங்க அலங்கார படகுகள் ஏரியை சுற்றி வலம் வந்தன. இந்த படகுகளை ஏரியை சுற்றி நின்ற உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இந்தப் போட்டியில் கொடைக் கானல் ஊராட்சி ஒன்றியம் அலங்கரித்த வீட்டுக்கொரு கழிப்பறைத் திட்டம், டெங்கு கொசுவை தத்ரூபமாக வடி வமைத்த அலங்கார படகு முதல் பரிசை தட்டிச் சென்றது. தோட்டக்கலைத் துறை சார்பில் வடிவமைக்கப்பட்ட குதிரை உடம்பில் மனித முகம் உருவம் கொண்ட நார்நியா படகு 2-ம் பரிசையும் அம்மா உணவகம் படகு 3-ம் பரிசையும் பெற்றன.

முன்னதாக போட்டியை நகராட்சித் தலைவர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்