விஜயகாந்துடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் எம்எல்ஏவுமான கே.பாலகிருஷ் ணன் நேற்று சந்தித்துப் பேசினார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவல கத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் உடனிருந்தார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், ‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்தும் தமிழக அரசியல் சூழல் குறித்தும் விஜயகாந்திடம் பேசினோம். மரி யாதை நிமித்தமாகவே அவரைச் சந்தித்தோம்’’ என்றார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு கேட்டே அவர்கள் விஜய காந்தை சந்தித்ததாகக் கூறப்படு கிறது. ஆனால், அவர் எந்த சாதக மான பதிலையும் அளிக்கவில்லை என மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜயகாந்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைப்புப் பொதுச்செய லாளர் எஸ்.மோகன்ராஜூலு ஆகி யோர் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர். அப்போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்து தனது அதிருப்தியை அவர் களிடம் விஜயகாந்த் வெளிப் படுத்தியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டுகூட இல்லாத நிலையில் இடைத்தேர்தலில் கவனம் செலுத்துவது தேவையற்றது என பாஜக, மார்க்சிஸ்ட் தலைவர்களிடம் விஜயகாந்த் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலைப்போல ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் யாருக்கும் ஆதரவு தராமல் அமைதி காக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்