ஆன்லைன் விண்ணப்ப முறையில் பிரச்சினை இல்லை: சென்னை பல்கலை. பதிவாளர் விளக்கம்

By செய்திப்பிரிவு

தொலைதூரக் கல்வி ஆன்லைன் விண்ணப்ப முறையில் பிரச்சினை ஏதும் இல்லை என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் கூறியுள்ளார்.

அஞ்சல்வழிக் கல்வி திட்டத் தில் படிக்கும் முதுகலை மாணவர் கள் ஆன்லைனில் விண்ணப்பிக் காமல், முன்பிருந்த பழைய முறையின்படி பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பயன்படுத்தி விண்ணப்பித்த காரணத்தினால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்று மாணவர்கள் சிலர் அளித்த தகவலின் பேரில் ‘தி இந்து’வில் செய்தி வெளியானது.

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் டேவிட் ஜவகர் நேற்று அளித்துள்ள விளக்கம் வருமாறு:

ஆன்லைன் விண்ணப்ப முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டு சிறப்பாக நடந்து கொண் டிருக்கிறது. ஆன்லைனில் விண் ணப்பிப்பதற்கு ஏப்ரல் 27-ம் தேதி வரை வாய்ப்பளித்து இரு முறை தேதி நீட்டிக்கப் பட்டது. தேர்வு மையம், தேர்வு அனுமதிச்சீட்டு, தேர்வுக்கால அட்டவணை பற்றி அறிய பல் கலைக்கழகத்தின் இணையதளத் தைப் பார்க்குமாறு கடந்த மே 12-ம் தேதி அனைத்து மாணவர் களுக்கும் செல்போன் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பியிருக்கி றோம். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய முடிய வில்லை என்று தொலைதூரக் கல்வி அலுவலகத்தில் இதுவரை எந்த புகாரும் பெறப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்