தமிழகத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறுமா என்பது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முடிவில் இருக்கிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடகா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு முதல்வரான 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வேண்டி இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் சூழலுக்கான இறுதி முடிவு ஜெயலலிதாவின் முடிவில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு மீதான வழக்கின் செஷன்ஸ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். இதனால், தேர்தல் ஆணைய புதிய சட்டதிருத்தத்தின்படி பதவி இழந்தார்.
தற்போது, இந்த வழக்கின் மேல்முறையீடு நடைபெற்ற கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.
இனி, அவர் தேர்தலில் போட்டியிட எந்தத் தடையும் இல்லாத நிலையில் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பதவி ஏற்புக்குப் பின் 6 மாத காலத்துக்குள் அவர் தமிழகத்தின் ஏதாவது ஒரு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு ஏதுவாக அவர் கடைசியாக எம்.எல்.ஏவாக இருந்து பதவி இழந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் எனவும் கூறப்படுகிறது.
இதற்காக, அங்கு அதிமுக எம்.எல்.ஏவாக இருக்கும் எஸ்.வளர்மதி ராஜினாமா செய்யும் பொருட்டு அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் வாய்ப்புகள் அதிகம்.
தமிழகத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து 'தி இந்து'விடம் மத்திய தேர்தல் ஆணைய வட்டாரம் கூறுகையில், "எந்த ஒரு மாநிலத்துக்கும் பொதுத் தேர்தல் வர உள்ள நிலையில் அதன் கடைசி ஆறு மாதங்கள் வரை அங்கு காலியாக இருக்கும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தலாம் என ஆணையத்தின் விதியில் அனுமதி உள்ளது.
எனவே, தமிழக சட்டப்பேரவை அடுத்த வருடம் மே மாதம் காலாவதியாக இருப்பினும், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு வரை எந்த ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ பதவி காலியானாலும் அதை நிரப்ப வாய்ப்புகள் அதிகம்" எனத் தெரிவித்துள்ளது.
எனவே, ஜெயலலிதாவுக்காக அவர் இழந்த ஸ்ரீரங்கம் தொகுதியே காலி செய்து கொடுக்கப்பட்டால், அங்கு உடனடியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் எனக் கருதப்படுகிறது. மீண்டும் முதல்வராகும் ஜெயலலிதா அடுத்த வருடம் மே மாதம் வரவிருக்கும் கால அவகாசத்துக்கு முன்னதாகவே தமிழக சட்டப்பேரவையை ஒருவேளை கலைத்து விட்டால் மட்டுமே இடைத்தேர்தல் வராது எனக் கருதப்படுகிறது.
இதன் பின் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒன்றாக வரும் சட்டப்பேரவை தேர்தலில் எங்கு வேண்டுமானாலும் ஜெயலலிதா போட்டியிடலாம். அதுவரை ஆறு மாதக் காலங்களுக்கு மட்டும் அவர் எம்.எல்.ஏவாக இல்லாமாலே தமிழகத்தின் முதல் அமைச்சராகலாம் எனவும் தேர்தல் ஆணைய சட்டத்தில் இடம் இருக்கிறது.
எனவே, தமிழகத்துக்கு இடைத்தேர்தல் வருவது என்பது ஜெயலலிதா எடுக்கும் இறுதி முடிவை பொருத்தது எனக் கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago