சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலை்ககழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலத்தை ஜாமீனில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுங்கத் துறை விதிமுறைகளை மீறி வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோதமான முறையில் ஆடம்பர கார்களை இறக்குமதி செய்து, பெருமளவில் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி கேரள மாநிலத்தைச் சேர்ந்த அலெக்ஸ் சி.ஜோசப் என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்து ஆடம்பர கார்களை வாங்கியதாகக் கூறி பலர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் அலெக்ஸ் ஜோசப்பிடமிருந்து வெளிநாட்டு ஆடம்பர கார்களை வாங்கியதாகக் கூறி சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலத்தை கடந்த திங்கள்கிழமை இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வெங்கடாசலம் தாக்கல் செய்த மனு புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சி.எஸ்.கர்ணன் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நிபந்தனைகளின் அடிப்படையில் மனுதாரர் வெங்கடாசலத்தை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அலெக்ஸ் சி.ஜோசப்பை ஜாமீனில் விடுவிக்குமாறு கடந்த புதன்கிழமை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago