வறட்சியால் பறவைகள் வரத்து இல்லை: வேடந்தாங்கல் சரணாலயம் இன்றுடன் மூடல் - பராமரிப்பு பணிகள் தொடங்கவுள்ளதாக தகவல்

By செய்திப்பிரிவு

ஏரியில் போதிய தண்ணீர் இல்லாத தாலும் வெளிநாட்டு பறவைகளின் வரத்து குறைந்த தாலும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்றுடன் மூடப்படுகிறது. இதையடுத்து ஏரி பராமரிப்பு பணிகள் தொடங்கப் படவுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந் தகம் ஒன்றியத்திற்குட்பட்ட வேடந் தாங்கலில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் சீசன் தொடங்குவது வழக்கம். நைஜீரியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுக ளைச் சேர்ந்த பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இங்கு வரும். ஏரியில் உள்ள மரக்கிளைகளில் கூடு கட்டி முட்டையிட்டு, குஞ்சு பொறித்து பின்னர் அவைகளையும் அழைத்துக்கொண்டு தாய்நாடு திரும்பும்.

இவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் சரணாலயம் திறக்கப் படும். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி சரணாலயம் திறக்கப் பட்டது.

ஆனால், வேடந்தாங்கல் மற்றும் சரணாலய ஏரியின் நீர் ஆதாரமாக கருதப்படும் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. நீரில்லாததால், பறவைகளின் வரத்தும் குறைந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். எனினும், கோடை விடுமுறைக்காலம் என்பதால் பறவைகள் இல்லாத நிலையிலும் சரணாலயம் மூடப்படவில்லை.

இந்நிலையில், ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள தாலும் பறவைகளின் வரத்து முற்றிலும் இல்லாமல் போன தாலும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்றுடன் மூடப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து, சரணாலய வனச்சரகர் முருகேசன் கூறிய தாவது: சரணாலயத்தில் சீசன் தொடங்கியதும் சாம்பல் நாரை 80, நத்தை கொத்தி நாரை 350, பாம்புதாரா 8, நீர்க்காகம் 400, வெள்ளை அரிவாள் மூக்கன் 450, வக்கா 150, சிறிய வெள்ளை கொக்கு 290, வெளிர் உடல் அரிவாள் மூக்கன் 10 என சுமார் 1,738 பறவைகள் வந்தன. கடந்த ஆண்டு இதே சீசனில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பறவைகள் வரை தங்கியிருந்தன. பின்னர், ஏரியிலிருந்த சிறிதளவு தண்ணீரும் குறைந்ததால், சரணாலயத்தில் தங்கியிருந்த பறவைகள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டன.

இதனால், இந்த ஆண்டு பல்வேறு இனங்களை சேர்ந்த 5 ஆயிரம் பறவைகள் மட்டுமே சரணாலயத்திற்கு வந்து சென்றன. இவற்றை பார்க்க 92 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். பார்வையாளர்களின் வருகையின் மூலம் அரசுக்கு ரூ.4,74,764 வருவாய் கிடைத்துள்ளது. தற்போது, பறவைகள் இல்லாத நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளதால் இந்தாண்டு ஒருமாதத்திற்கு முன்னதாகவே சரணாலயத்தை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னர் சரணாலய ஏரியின் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைப்பது மற்றும் பட்டுப்போன மரங்களை அகற்றுவது, ஏரியின் கரைகளை பலப்படுத்தி கரை பகுதியில் புதிய மரக்கன்றுகளை நடுவது போன்ற பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்