தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக – தேமுதிக இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடந்தது.
‘தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரிலேயே செயல்படுவோம்’ என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாஜகவுடன் கூட்டணி என்ற முடிவை தேமுதிகவும் பாமகவும் கடந்த வியாழக்கிழமை அறிவித்தன. இதையடுத்து அந்தக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது. பாமக குழுவினர், பாஜக அலுவலகத்துக்கு வந்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பாஜக குழுவினர், தேமுதிக அலு வலகத்துக்கு சென்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை பாஜக அலுவலகத்துக்கு எல்.கே.சுதீஷ், சந்திரகுமார் உள்ளிட்ட 9 பேர் கொண்ட தேமுதிக குழுவினர் வந்தனர். முதல்முறையாக தங்களது அலுவலகத்துக்கு வந்த தேமுதி கவினரை பாஜக நிர்வாகிகள் தாமரை மலர் கொடுத்து வர வேற்றனர்.
பின்னர் இரு கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரும் சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜக தரப்பில் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் மோகன்ராஜுலு, முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உள்ளிட்ட 12 பேர் கலந்து கொண்டனர்.
முதல்நிலை கூட்டணி
பேச்சுவார்த்தைக்கு பிறகு நிருபர்களிடம் தேமுதிக இளை ஞரணிச் செயலாளர் சுதீஷ் கூறுகையில், ‘‘பாஜக தேர்தல் குழுவினர் தேமுதிக அலுவலகத் துக்கு வந்து முதல்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து நாங்கள் இப்போது பாஜக அலுவலகத்துக்கு வந்து 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். கூட்டணி அறிவிப்பை எங்கள் தலைவர் விஜயகாந்த் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பார். எங்களது இந்தக் கூட்டணி தமிழகத்தின் முதல்நிலைக் கூட்டணியாக இருக்கும்” என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணி
தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘எங்கள் கூட்டணி தமிழகத்தில் பலம் வாய்ந்த கூட்டணியாக அமையும். கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும் அதை ஏற்றுக் கொண்டும் செயல்படுவதன் மூலம் வெற்றி காண்போம். முரண்பட்டவர்கள் சொல்லும் முரண்பாடான கருத்துகளை கண்டுகொள்ளத் தேவையில்லை. தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி சேரும் கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழே ஒருங்கிணைந்து செயல்படும்’’
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago