புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பாஸ் செல்லும்: போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர் களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரையில் பழைய பஸ் பாஸ் செல்லும் என்று அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட் டுள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படவுள்ளன. இப்பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் பஸ் பாஸ் வழங்கப்பட்ட தால் சிறிது காலதாமதம் ஏற் பட்டது. இந்த ஆண்டு மாணவர்களுக்கு சிரமமின்றி இலவச பஸ் பாஸ் வழங்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான டெண்டர் தற்போது விடப்பட்டுள்ளது.

டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன. கடந்த ஆண்டு 25 லட்சம் பேருக்கு பாஸ் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு 27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பஸ் பாஸ் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைப் பட்டால் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆண்டுதோறும் பஸ் பாஸ் வழங்க ஒன்றிரண்டு மாதங்கள் ஆகும் என்பதால் மாணவர்கள் காசு கொடுத்து பஸ்ஸில் செல்ல வேண்டியுள்ளது.

எனவே, மாணவர்களின் நலன்கருதி, புதிய பஸ் பாஸ் வழங்கும் வரையில் பழைய பஸ் பாஸை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்கு வரத்து கழகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் மாதம் வரையில் பழைய பஸ் பாஸ் செல்லும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத் துத்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், “பள்ளிகள் திறப்பதற்கு முன்பே பஸ் பாஸ் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இருப்பினும், ஓரிரு வாரங்கள் காலதாமதம் ஏற்படலாம். எனவே, மாணவர்களின் நலன்கருதி வரும் ஆகஸ்ட் மாதம் வரையில் பழைய பஸ் பாஸை மாணவர்கள் பயன்படுத்தலாம், அதை அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

பெற்றோர் கோரிக்கை

அரசு போக்குவரத்து கழகங்க ளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு வெறும் பெயரளவில் இருக்கக் கூடாது. கடந்த ஆண்டிலும் புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸ் பயன் படுத்தலாம், அல்லது பள்ளி சீருடையில் மாணவர்கள் வந்தால் பயணச்சீட்டு கேட்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பல்வேறு இடங்களில் நடத்துநர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, அரசு உத்தரவை அதிகாரபூர்வமாக போக்குவ ரத்து பணிமனைகளின் தகவல் பலகைகளில் ஒட்ட வேண்டுமென பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்