நூல் வெளியீட்டு விழாவில் இல.கணேசன், ப.சிதம்பரம் பங்கேற்பு

மரபின் மைந்தன் முத்தையா எழுதிய, ‘அற்புதர் சத்குருவுடன் எனது அனுப வங்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழா வில் முன்னாள் மத்திய நிதி அமைச் சர் ப.சிதம்பரம், பாஜக மூத்த தலை வர் இல.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) இரவு நடைபெற்ற விழாவில் நூலை ப.சிதம்பரம் வெளியிட இல.கணேசன் முதல் பிரதியை பெற் றுக் கொண்டார்.

இவ்விழாவில் பேசிய ப.சிதம்பரம், ‘‘சத்குரு ஜக்கிவாசுதேவுடன் எனக்கு அறிமுகவில்லை. ஆனால், ஒவ்வொரு வரின் வாழ்க்கையிலும் யாராவது ஒருவர் தாக்கத்தை ஏற்படுத்தியிருப் பார்கள். நான் பள்ளியில் படிக்கும் போது வெர்ஜினியா என்ற ஆசிரியர் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அதுபோல சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும்போது அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆங் கிலப் பேராசிரியர் கோயல் தாக்கத்தை ஏற்படுத்தினார். சில ஆண்டுகளே படித்தாலும் அவர்களின் பாதிப்பில் இருந்து விடுபட முடியவில்லை. பல ருடைய வாழ்க்கையில் மாதா, பிதா, தெய்வத்தை விட குரு முக்கியமானராக இருக்கிறார்’’ என்றார்.

இல.கணேசன் பேசும்போது, ‘‘அரசியல்வாதிகளை அரசியல் பிரிக்கலாம். ஆனால், இலக்கியமும், ஆன்மிகமும் இணைக்கும். இதற்கு இந்த நூல் வெளியீட்டு விழா சிறந்த எடுத்துக்காட்டாகும். எழுத்து என்ற அமைப்பின் மூலம் தமிழுக்கு தொண்டாற்றி வரும் சிதம்பரத்தின் பணி பாராட்டுக்குரியது’’ என்றார்.

நீதிபதி கோகுலகிருஷ்ணன், சுவாமி பிரபோதா விழாவில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்