விவசாயிகளின் துயர் நீக்கிய இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை

By ஜி.ஞானவேல் முருகன்

இன்று - மே 15: பொறியாளர் ஆர்தர் காட்டன் பிறந்த தினம்

முல்லை பெரியாறு அணை என்றால் பென்னிகுக்கும், மேட்டூர் அணை என்றால் ஸ்டான்லியும் நினைவுக்கு வருவதுபோல, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேலணை என்றவுடன் நினைவுக்கு வருபவர் ஆங்கிலேய பொறியாளர் சர் ஆர் தர் காட்டன்.

இங்கிலாந்தில் 1803, மே 15-ல் பிறந்த ஆர்தர் காட்டன், இந்தியா வில் நீர்ப் பாசன வசதிகள் செய்து தரவும், கால்வாய்கள் அமைக்கவும், அணை கட்டுவதற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். இதனால், இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.

1829-ல் காவிரி பாசனப் பகு திக்கு பொறுப்பாளராக நியமிக்கப் பட்ட ஆர்தர் காட்டன், மணல் மேடு களால் நீரோட்டம் தடைபட்டிருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கரிகால் சோழன் கட்டிய கல்லணையின் அடித்தளத்தைக் கண்டு வியந்து, “ஆழம் காண முடியாத ஆற்று மணற்படுகையில் அடித்தளம் அமைக்கும் தொழில்நுட்பத்தை பண்டைய தமிழர்கள் வாயிலாக அறிந்து கொண்டேன்” என்றார். கல்லணைக்கு ‘கிராண்ட் அணை கட்’ என்ற பெயரைச் சூட்டியவரும் இவரே.

காவிரி ஆறு முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. கொள்ளிடம் ஆற்றுப் பகுதி தாழ்வாக இருப்பதால், அங்கு நீர் அதிகமாக பாய்ந்து காவிரியில் உரிய நீர் வரத்து இல்லாமல் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளின் துயர் துடைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பொறுப்பை ஆர்தர் காட்டனிடம் வழங்கியது ஆங்கிலேய அரசு.

இதையடுத்து, கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு 1835-36 இல் கொள்ளிடத்தின் குறுக்கே மேலணையைக் கட்டினார். இதனால் கொள்ளிடம் ஆற்றில் வீணாக நீர் செல்வது தடுக்கப்பட்டது. தவிர கும்பகோணம் அணைக்கரை கீழணை, வெண்ணாறு, வெட்டாறு நீர்ப் பாசனங்களையும் இவர் முறைப்படுத்தினார்.

ஆந்திராவில் கோதாவரியின் குறுக்கே 1942-57-ம் ஆண்டு களில் இவர் கட்டிய அணையால் தரிசாகக் கிடந்த 10 லட்சம் ஏக்கர் நிலப் பகுதியில் இன்று முப்போகம் விளைகிறது. அதற்கு நன்றிக் கடனாக அங்கு கிராமந்தோறும் ஆர்தர் காட்டன் சிலையை நிறுவி யுள்ளனர். மேலும், அவரது வர லாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் ராஜமுந்திரியில் அருங்காட்சியகம் அமைத்துள்ளனர்.

இத்தகைய சிறப்புடைய ஆர்தர் காட்டனைப் பற்றி தமிழக விவசாயிகளும், இளைய தலை முறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் வ. சுந்தரராஜ் கூறும்போது, “இந்திய தேசத்தின் வறுமையைப் போக்க ஒரே தீர்வு, நீர் வளத்தை சிறப்பாக பயன்படுத்துவதுதான் என்று கூறியவர் சர் ஆர்தர் காட்டன். தமிழகம் முழுவதும் பல்வேறு நீர்ப் பாசன திட்டங்களை முடித் துக் கொடுத்த ஆர்தர் காட்ட னுக்கு முக்கொம்பிலும், கல்ல ணையிலும் பெயரளவில் மட்டுமே சிலை இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாறு குறித்து பெரும் பாலானோருக்கு தெரியவில்லை.

ஆந்திராவில் கோதாவரி மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்துக் கும் அதிகமான சிலைகள் ஆர்தர் காட்டனுக்கு இருக்கிறது. அவரது பிறந்தநாளை அம்மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். அவரது வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் தமிழகத்திலும் அருங் காட்சியகம் அமைக்க வேண்டும். பள்ளி பாடத் திட்டத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை இணைக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்