ஆதார் விவரம் தராதவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கமா?- தேர்தல் துறை அதிகாரி விளக்கம்

ஆதார் எண் விவரங்கள் தராத வர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்று தமிழக தேர்தல் துறை தெரிவித்துள்ளது.

போலி வாக்காளர்களை தவிர்த்து, பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலை தயாரிக்க தேசிய அளவில் வாக் காளர் பட்டியலை செம்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்திட் டத்தின்படி ஆதார் எண், தொலை பேசி மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படுகின்றன. கடந்த மார்ச்சில் இதற்கான பணிகள் தொடங்கின.

தமிழகத்தில் உள்ள 64,099 வாக்குச்சாவடிகளின் அலுவலர் களும் வாக்காளர் பட்டியலுடன் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தினர். அவர் களின் ஆதார் எண், தொலைபேசி அல்லது கைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி இருந்தால் அதையும் பதிவு செய்தனர். இவற் றுடன் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்டவை இருப்பின் அதற்கான படிவங்களையும், ஆவ ணங்களையும் பெற்றுக் கொண் டனர்.

இதைத் தொடர்ந்து ஆதார் விவரங்களை கணினியில் பதிவு செய்து, ஆதார் மற்றும் வாக்காளர் பட்டியலை இணைக்கும் பணி நடந்துவருகிறது. வாக்குச்சாவடி அலுவலர் வரும்போது வீட்டில் இல்லாதவர்கள், விடுபட்டவர்களின் வசதிக்காக 4 சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன

தமிழகத்தில் உள்ள 5.62 வாக்காளர்களில் 5.55 கோடி (98.72 சதவீதம்) வாக்காளர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் 4.97 கோடி(88.48 சதவீதம்) வாக்காளர்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறும்போது, ‘‘மொத்தம் உள்ள 5.62 கோடி வாக்காளர்களில் 5.55 கோடி வாக்காளர்கள் விவரங் கள் பெறப்பட்டுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம் தவிர 30 மாவட்டங்களில் விவரங்கள் பெறும் பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஆதார் - வாக்காளர் பட்டியல் இணைப்பு பணிகள் அடுத்த 2, 3 வாரங்களில் முடியும்’’ என்றார்.

இதற்கிடையே, சென்னை உள் ளிட்ட சில பகுதிகளில் ஆதார் எண் அளிக்காத வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப் படும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்ட தாக தகவல் வெளியாகி யது.

இது தொடர்பாக தமிழக தேர்தல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘வாக்காளர்கள் ஆதார் எண் தகவல்கள் அளிக்கா விட்டாலும் அவர்கள் பெயர் வாக்கா ளர் பட்டியலில் இருந்து நீக்கப் படாது என்று தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது. எனவே, வாக்காளர் பட்டியலில் இருந்து யாருடைய பெயரும் நீக்கப்படாது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்