மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் திமுக, அதிமுக: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கோவை, செல்வபுரம் பகுதியில் மோடி அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:

தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்காததால் ஏழை, எளிய குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மதுவால் ஆயிரக்கணக்கான உயிரிழப்பு கள், லட்சக்கணக்கான இளைஞர் களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட இந்த இரண்டு கட்சிகளுமே காரணமாகியுள்ளன.

இந்த நிலை மாறவில்லை எனில், மதுவற்ற தமிழகத்தை உருவாக்கும் முயற்சியில் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். மதுவற்ற தமிழகத்தை உருவாக்கும் பாஜக முயற்சி 2016- சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்லும்.

நிலம் கையக்கப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திட்டமிட்டு தவறான பிரச்சாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் விவசாயி களுக்கு மட்டுமின்றி, கிராமங் களுக்கும், நாட்டுக்கும் பலனளிக் கும் என்பதை தெளிவுப் படுத்த பாஜக அரசு தயாராக இருக்கி றது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இன்றி, ஒருமித்த கருத்துடன் ஒரு நபரை முன்னிறுத்தியோ, இல்லாமலோ இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்போம்.

கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் அரசில் ப.சிதம்பரம் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தாலும், தமிழகத்துக்கு எவ்வித திட்டங்களையும் அவர் கொண்டு வரவில்லைஎன்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்