ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பாமக புறக்கணிக்கும்: கோவையில் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு அறிவிக் கப்பட்டுள்ள இடைத்தேர்தலை பாமக புறக்கணிக்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மண்டல மாநாடு ஜுன் 12-ம் தேதி நடைபெறுகிறது. மண்டல மாநாட்டு பணிகள்குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இரு தினங்களாக ஆலோசனை நடத்தி வந்த ராமதாஸ் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. மேல் முறையீடு செய்ய வலுவான காரணங்கள் இருந்தும் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய கர்நாடக ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டுமா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞரை யார் நியமிப்பது என சட்ட நிபுணர்களிடம் கேட்டுள்ளதாக கர்நாடக அரசு பதில் அளித்து வருகிறது.

கர்நாடக அரசு இவ்வாறு நடந்துகொள்வது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுப்பதாக உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்த பின்னரே, திமுக அந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டும். கர்நாடக அரசுக்கு முன்பாக திமுக மேல்முறையீடு செய்யக்கூடாது.

ஜெயலலிதா பதவி ஏற்பின் போது தேசிய கீதம் 2 நிமிடங்களு டன் நிறுத்தப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதாவை சட்டப்பேரவை உறுப்பினராக ஆக்க அதிகாரிகளும், தேர்தல் ஆணையமும் வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்க்கிறது.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிக்க 110 நாள் எடுத்துக்கொண்ட தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை 10 நாட்களில் அறிவித்துள் ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்காக பொதுமக்களுக்கு ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்க மாட்டோம் என அதிமுக உத்தர வாதம் அளித்தால் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பாமக யோசிக்கும். ஆனால், அதிமுக அப்படிச் சொல்ல முன் வராது என்பதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்