கிருஷ்ணகிரி அருகே முயல் வேட்டைக்கு சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி அருகே முயல் வேட்டைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கி பலியானார். அவருடன் சென்ற மற்றொரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மருதேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நகுலன்(50). விவசாயி.

இவர் நேற்று இரவு, குருபரப்பள்ளி அருகே உள்ள புளியஞ்சேரி பகுதியை சேர்ந்த சிவசங்கரன்(45) என்பவருடன், பாலதொட்டாராயன் மலைப்பகுதியில் வேட்டைக்காக நாட்டுத்துப்பாக்கியுடன் சென்றனர்.

வேட்டைக்கு சென்றவர்கள் 2 முயல்களை பிடித்து கொண்டு, இன்று அதிகாலை வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

குருபரப்பள்ளி பகுதியில் உள்ள வெங்கடசாமி என்பவரது மாந்தோப்பின் அருகே நடந்து வரும் போது, அங்கு ஏற்கனவே அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியை மிதித்துள்ளனர்.

இதில் மின்சாரம் பாயந்து நகுலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தூக்கிவீசப்பட்ட சிவசங்கரன் படுகாயங்களுடன், அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைகாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த வந்த குருபரப்பள்ளி போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு வேட்டைக்காக பயன்படுத்தப்பட்ட நாட்டுத்துப்பாக்கி மற்றும் 2 முயல்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், இது குறித்து இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், அனுமதியில்லாமல் மின்வேலி பதித்த வெங்கடசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்விபத்து குறித்து, கிருஷ்ணகிரி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சின்னதம்பி கூறும் போது, விவசாய நிலங்களில் மின் கம்பி அமைக்க கூடாது என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இருந்த போதிலும் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது.

மின்சாரத்தை திருடி, மின் வேலி அமைப்பது சட்ட விரோதமான செயலாகும். இதற்காக கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் அறிவுறுத்தி உள்ளோம். விவசாயிகள் காட்டுப்பன்றி, எலிகள் தொல்லைகளில் பயிர்களை காக்க பல்வேறு வழி முறைகள் உள்ளது.

அதனைவிட்டு, மின்வேலி அமைத்து பயிர்களை காக்கும் செயலில் ஈடுப்பட வேண்டாம் எனவும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த நகுலனுக்கு, மின்சார வாரியம் மூலம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்