பிளஸ் 2 தேர்வில் 1,100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவி உயர் கல்வி பயில வசதியின்றி தவித்து வருகின்றனர். இவர்கள் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள்.
திருத்தங்கல் சிறப்புப் பள்ளி மாணவி சி.முத்துச்செல்வி கணக்கு பதிவியல் பாடத்தில் 200-க்கு 200, வணிகவியலில் 199, பொருளியலில் 194, கணினி அறிவியலில் 183, தமிழில் 194, ஆங்கிலத்தில் 165 என மொத்தம் 1,135 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார்.
திருத்தங்கல் சிறப்புப் பள்ளி மாணவி கே.கௌசல்யா 1,103 மதிப்பெண்களும், முடி திருத்தும் தொழில் செய்துவந்த சிவகாசி நேரு காலனி சிறப்புப் பள்ளி மாணவர் ஆர்.அழகுராஜா 1,051 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து மாணவி சி.முத்துச்செல்வி கூறியதாவது:
தாய் மாரீஸ்வரி இறந்துவிட்டார். தந்தை சின்னப்பாண்டி கறிக் கடை யில் வேலை செய்து வருகிறார். தம்பி, தங்கையுடன் திருத்தங்கல் சுக்கிரவார்பட்டி சாலையில் உள்ள பாட்டி மாரியம்மாள் வீட்டில் வசித்து வருகிறேன். படிப்பைத் தொடர முடி யாமல் பட்டாசுகளுக்கு தேவையான குழல் சுற்றும் வேலை செய்தும், பாட்டியுடன் சேர்ந்து இட்லி சுட்டு விற்றும் உதவியாக இருந்து வந்தேன். குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்கள் மீட்டு பள்ளியில் சேர்த்தனர். சி.ஏ. படித்து எனது குடும்பத்தை தலைநிமிரச் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றார்.
முத்துச்செல்வி தற்போது சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். படிக்க விண்ணப்பித்துள்ளார். அதற்கான கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்.
தந்தையுடன் சலூன் கடையில் பணியாற்றி வந்த ஆர்.அழகுராஜ், அவரது சகோதரர் ஆர்.காளிராஜன் ஆகியோரும் குழந்தை தொழி லாளர்களாக இருந்து மீட்கப் பட்டவர்கள். பிளஸ் 2 தேர்வில் அழகுராஜ் 1,051 மதிப்பெண்களும், காளிராஜன் 933 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தங்களது மேல்படிப்புக்காக உதவித் தொகை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
உயர் கல்வி பெற உதவிக்கரம் கிடைக்குமா? என்று காத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவ நினைப்போர் 82206 84158 என்ற எண்ணில் மாணவி சி.முத்துச் செல்வியையும், 96262 41053 என்ற எண்ணில் மாணவர் அழகு ராஜையும் தொடர்புகொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago