வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலைகள்: தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்

தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் அருகே நேற்று காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகியுள்ளன. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு அருகே உருவாகியிருந்த காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றைய மழை நிலவரப்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 12 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் 5 செ.மீ., திருச்சி மாவட்டம் மேல் அணைகட்டில் 4 செ.மீ., திருச்சி மாவட்டம் துறையூர், சேலம், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கடலூர் மாவட்டம் தொழுதூர் உள்ளிட்ட இடங்களில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் அதிக வெயில் பதிவாகியிருந்தது. மதுரையில் 36.2 டிகிரி, கரூரில் 36 டிகிரி, திருச்சியில் 35.8 டிகிரி, சேலத்தில் 34.8 டிகிரி வெயில் பதிவானது.

காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஒரு சில இடங் களிலும் தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE