புதுவை சட்டப்பேரவையில் வரியில்லா பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரியில் ரூ.6,450 கோடிக்கு வரியில்லா பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப் பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். என்.ஆர்.காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் முதன்முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்வர் ரங்கசாமி பேசும்போது:

புதுச்சேரிக்கு 2015-16ம் ஆண்டு வரவு செலவு திட்டத்துக்கு ரூ.6,800 கோடி பரிந்துரை செய்யப்பட்டது. மத்திய அரசு பட்ஜெட்டை ரூ.6,450 கோடியாக குறைத்தது. மீன்பிடி தடைக் காலம் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் தடைக் கால நிவாரணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வை-பை (wi-fi) சேவை தொடங்கப்படும்.

புதுச்சேரி கோரிமேட்டில் ஆயுஷ் மருத்துவமனை அமைக்கப்படும். ஆதி திராவிட ஏழை மணப் பெண்ணுக்கு திருமண செலவுக்காக வழங்கிய தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரமாக வழங்கப்பட உள்ளது என்று தெரி வித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE