சத்துணவுப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

சத்துணவுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் பழனிச்சாமி திருச்சியில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவுப் பணி யாளர் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் சத்துணவுப் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு வரை யறுக்கப்பட்ட ஊதியம், பணிக் கொடை, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல் உள்ளிட்ட 34 அம்ச கோரிக்கைகளை முன் வைத்துப் போராடி வருகிறோம். இதையடுத்து அரசு அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டோம். இந்தப் பேச்சுவார்த்தை யில் எவ்வித சுமுக முடிவும் எட்டப்படாததால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளோம். இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஏப்.16-ல் உண்ணாவிரதப் போராட்டம், ஏப்.17-ல் மறியலில் ஈடுபட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இப்போராட்டத்தில் அனைத்து சத்துணவுப் பணியாளர்களும் பங் கேற்பார்கள். போராட்டத்தில் ஈடு படுவோரை அரசு மிரட்டுவது ஏற்கத் தக்கது அல்ல என்றார். அப்போது சங்கப் பொதுச் செயலாளர் ராமநாதன் உடனிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE