அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தெரிவித்தார்.
தமிழ்நாடு பெண் வழக் கறிஞர் சங்கங்களின் கூட்டமைப் பின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டைத் தொடங்கி வைத்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பேசியதாவது:
ஆண் என்பது வாழ்க்கையில் பாதி தான். பெண் சேர்ந்தால் மட்டுமே வாழ்க்கை முழுமை அடையும். பெண்களுக்கு மன தைரியம் அதிகம்.
சட்டத்துறையில் பெண்களின் பங்கு அதிகமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டெல்லி மாவட்ட நீதிமன்றங்களில் 73 சத வீதம் நீதிபதிகள் பெண்களே. பஞ்சாப், ஹரியானா மாநிலங் களில் உள்ள மாவட்ட நீதிமன்றங் களிலும் 43 சதவீதம் பெண்கள் நீதிபதிகளாக உள்ளனர். தமிழகத் திலும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்பதால் அதுவரை பெண்கள் பொறுமை காக்க வேண்டும்.
பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்பது சரியானது அல்ல. அவர்களை சமமாக பாவித்து, அனைத்து துறைகளிலும் சம வாய்ப்பு அளிக்கவேண்டும். மாற் றம் ஒன்றே மாறாதது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று தலைமை நீதிபதி பேசி னார். முன்னதாக, மாநாட்டில் பெண் களுக்கு எதிரான வன்முறைகளை சித்திரிக்கும் வகையில் ஓவியர் சுவர்ணலதா வரைந்த ஓவியங் களின் கண்காட்சியை தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் திறந்து வைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago