தாய் - சேய் நல உதவி மையம் தொடக்கம்: கர்ப்பிணிகள் ஆலோசனைகள் பெறலாம்

By செய்திப்பிரிவு

கர்ப்பிணிகளுக்கு தகவல்கள், ஆலோசனைகள் வழங்குவதற் காக தாய் - சேய் நல உதவி மற்றும் கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தாய் - சேய் நல உதவி மற்றும் கண்காணிப்பு மையம் தொடக்க விழா, சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடந்தது. சுகாதாரத்துறை செயலா ளர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடந்த விழாவில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் பேசிய தாவது: இந்த மையம் 104 சேவை மையத்துடன் (மருத்துவ ஆலோ சனை சேவை) இணைக்கப்பட் டுள்ளது.

முதற்கட்டமாக சனிக் கிழமை உட்பட காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் மையம் செயல்படும். தாய்க்கும் சேய்க்கும் பல பயனுள்ள தகவல்கள் தொலைபேசி வாயி லாக இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மூலம் வழங்கப்படும். கர்ப்பிணிகளுக்கும் கள அளவில் செயல்படும் கிராம சுகாதார செவிலியர்களுக்கும் பேறுகால முன் மற்றும் பின் கவனிப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தை 104 என்ற சேவை எண்ணிலும், 044-24336673 மற்றும் 044-24306470 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம். இன்னும் 2 நாட்களில் இந்த மையம் 108 சேவை (ஆம்புலன்ஸ் சேவை) மையத்துடன் இணைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE