விதிகளை மீறி இறைச்சிக் கூடங்கள்: மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

சென்னையில் விதிகளை மீறி செயல்படும் இறைச்சிக் கூடங்கள் தொடர்பாக மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளிக்கும் அறிக்கை திருப்தி அளிக்காவிட்டால் இறைச்சிக் கூடங்களை மூட உத்தரவிடப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 1-ம் அமர்வு எச்சரித்துள்ளது.

விதிகளை மீறி இயக்கப்பட்டு வரும் இறைச்சிக் கூடங்களை மூடக்கோரி பிஎஃப்சிஐ அமைப்பு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 1-ம் அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

“இந்த வழக்கில் நகராட்சி நிர்வாகம் பிரதிவாதியாக சேர வேண்டும். மாநக ராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தற்போதைய நிலவரம் குறித்த அறிக் கையை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கை திருப்தி அளிக்காவிட்டால் இறைச்சிக் கூடங்களை மூட உத்தரவிடப்படும்” என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான அடுத்த விசாரணையை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE