கோயம்பேடு- அசோக் நகர் வரை மெட்ரோ ரயில் உள்கட்டமைப்பு பணிகள் 2-ம் கட்ட ஆய்வு

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது பாதையில் சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 13 கிமீ தொலை வுக்கு பணிகள் நிறைவடைந் துள்ளன. ரயில் நிலையங்களின் பாதுகாப்பு அம்சங்கள், சிக்னல் உள்ளிட்டவை தொடர்பான முதல் கட்ட ஆய்வை ரயில்வே பாது காப்பு ஆணையர் மிட்டல் தலைமை யிலான குழுவினர் ஏற்கெனவே மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், கோயம் பேடு- அசோக் நகர் வரை பாது காப்பு தொடர்பான 2-வது கட்ட ஆய்வை மிட்டல் தலைமை யிலான குழுவினர் நேற்று மேற்கொண்டனர். கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை ட்ராலியில் பயணித்து அவர்கள் பல்வேறு ஆய்வுகளை செய்தனர்.

இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் நிருபர்களிடம் கூறியதாவது:

பயணிகளின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், ரயில் பாதை, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதி போன்றவை குறித்து 2-வது கட்டமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கை மத்திய அரசிடம் விரைவில் அளிக்கப்படும். மேலும், மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவது குறித்து மத்திய அரசும் நிர்வாகக் குழுவும் முடிவு செய்யும் என்றார் மிட்டல்.

முன்னதாக, மிட்டல் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகத்தில் நேற்று காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற் றது. சுமார் அரை மணி நேரம் நடை பெற்ற இந்த கூட்டத்தில் இது வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் ஆய்வில் கண்டறியப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE