பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பாதிப்பில்லை: தமிழகம் முழுவதும் 90% அரசு பஸ்கள் இயங்கின

தொமுச உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் 90 சதவீத அரசு பஸ்கள் நேற்று வழக்கம்போல இயக்கப்பட்டன.

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த 6-வது கட்ட பேச்சுவார்த் தையில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 5.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மொத்தமுள்ள 42 தொழிற்சங்கங்களில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை, ஐஎன்டியுசி உள்ளிட்ட 28 சங்கங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஆனால், 5.5 சதவீத ஊதிய உயர்வு உட்பட பல்வேறு விஷயங் களில் அதிருப்தி அடைந்த தொமுச, சிஐடியு, பாட்டாளி தொழிற் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வில்லை. ஊதிய ஒப்பந்தப் பேச்சு வார்த்தை முடிந்த பிறகு இந்த சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோ சனை நடத்தி, 14-ம் தேதி (நேற்று) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அதே நேரத் தில் அரசு பஸ்கள் வழக்கம் போல இயங்கும் என போக்குவரத் துத்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

அறிவித்தபடி தொமுச, சிஐடியு உள்ளிட்ட 14 தொழிற்சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அந்த சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. ஆனால், ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட 28 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.

தமிழ்ப் புத்தாண்டு தினம் என்பதால் வடபழனி, திருவல்லிக் கேணி, மயிலாப்பூர், திருவான் மியூர், திருவேற்காடு, மாங்காடு உள்ளிட்ட முக்கிய கோயில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. வேலைநிறுத்தத்தையொட்டி பணிமனைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

‘‘தமிழகம் முழுவதும் சராசரி யாக 90 சதவீத பஸ்கள் இயக்கப் பட்டன. சென்னையைப் பொறுத்த வரை 3,058 பஸ்கள் இயக்கப் பட்டன. திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உட்பட ஒரு சில இடங்களில் மட்டும் காலையில் பஸ்களை இயக்கு வதில் சற்று சிரமம் ஏற்பட்டது. பின்னர் உடனடியாக நிலைமை சரிசெய்யப்பட்டு தேவையான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன’’ என்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலைநிறுத்தம் குறித்து ஏஐடியுசி பொதுச் செயலாளர் லட்சு மணன் கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் 30 முதல் 35 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு செல்ல வில்லை. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித் தும் வேறுவழியில்லாமல் பஸ் களை இயக்கினர். திடீரென இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டதால், போதிய அளவுக்கு திட்டமிட முடியவில்லை.

போக்குவரத்து தொழிற் சங்கங்கள் ஒன்றுகூடி அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்போம். அந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடக்கும். மத்திய சாலை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவைக் கண்டித்து வரும் 30-ம் தேதி அகில இந்திய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தம் நடக்கிறது. இதில், தமிழகத்தில் உள்ள போக்கு வரத்துத் தொழிலாளர்கள் திரளாக கலந்துகொள்வர்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE