தமிழகத்துக்கு வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஸ்டாலின், அன்புமணி கோரிக்கை

தமிழகத்துக்கு வந்த முதலீடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

மு.க.ஸ்டாலின்: நீண்ட நாட் களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழக அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, செப்டம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு கடந்த 2013-ம் ஆண்டே நடந்திருக்க வேண்டும். மாநாட்டின் மூலம் ரூ.76 ஆயிரம் கோடி முதலீடுகள் வரும் என்றும், மாநாட்டுக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இப்படி எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிட்டு மாநாட்டை தள்ளி வைப்பதால் உலக அரங்கில் தமிழகத்தின் நற்பெயர் பாதிக்கப்படும். முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்து விடுவார்கள். எனவே, ரூ.76 ஆயிரம் கோடி முதலீடு செய்பவர்களின் விவரங்களையும், மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடி செலவு செய்யப்பட்ட விவரங்களையும் வெள்ளை அறிக்கையாக வெளி யிட வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்: மே 23, 24 தேதிகளில் சென்னையில் நடக்கவிருந்த உலக முதலீட்டாளர் கள் மாநாடு, செப்டம்பருக்கு மாற்றப் பட்டுள்ளது. தமிழகத்தில் பல்லா யிரம் கோடியில் செயல்படுத்தப் பட்ட திட்டங்கள் யாரால் திறக்கப்பட வேண்டும் என நினைத்து கிடப்பில் போட்டிருக்கிறார்களோ, அதே காரணத்துக்காகவே இந்த மாநாடும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் மின் துறை யில் ரூ.23 ஆயிரம் கோடி, மற்ற துறைகளில் ரூ.53 ஆயிரம் கோடி என ரூ.76 ஆயிரம் கோடி முதலீடுகள் செய்ய தொழிலதிபர்கள் ஒப்புதல் அளித்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது உண்மையாக இருந்தால் அவர்களு டன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதுதான் சரியாக இருக்கும்.

தமிழகத்தில் இதுவரை 33 நிறுவனங்களுடன் புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப் பட்டுள்ளதாகவும், அதன்மூலம் 1.62 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் தொழில் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனவே, இதுவரை தமிழகத்தில் செய் யப்பட்ட முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

33 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மூலம் 1.62 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE