மண்டபத்தில் கரை ஒதுங்கிய 50 அடி நீள திமிங்கலம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மன்னார் வளைகுடா கடற்கரையோரம் 50 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் இறந்த நிலையில் நேற்று கரை ஒதுங்கியது.

பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கலம், மற்ற மீன் இனங்களைப்போல செவுள்களால் சுவாசிக்காமல் மனிதர் களைப் போலவே நுரையீரல் இருப்பதால் சுவாசிப்பதற்கு கடலின் மேற்பரப்புக்கு அடிக்கடி வந்து செல்லும். இவற்றால் அதிகபட்சமாக 2 மணி நேரம் வரைகூட மூச்சுவிடாமல் இருக்க முடியும்.

இந்நிலையில், மண்டபம் அருகே சுமார் 50 அடி நீளமும், 15 டன் எடையும் கொண்ட திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் நேற்று கரை ஒதுங்கியது. கடந்த ஜனவரியில் வாலைத் தீவில் 54 அடி நீளமுள்ள திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. ஒரே பகுதியில் அடுத்தடுத்து 2 ராட்சத திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியது குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE