ராணுவ தலைமை தளபதி வருகை: வெலிங்டனில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்

இந்திய ராணுவ தலைமை தளபதி வருகையையொட்டி, வெலிங்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங் கேற்பதற்காக, ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங் சுஹா, குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ மையத்துக்கு இன்று (ஏப்.4) வருகிறார். ராணுவ வீரர்களி டையே நடந்த கால்பந்து போட்டி யில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார். ராணுவ மையத்திலுள்ள நாகேஷ் பேரக்சில் நாளை (ஏப்.5) நடக்கும் ராணுவ அணிவகுப்பை பார்வையிடுகிறார். ‘கலர் பிரசண் டேசன் பரேட்’ என்றழைக்கப்படும் இந்த அணிவகுப்பு, 25 ஆண்டு களுக்கு பின்னர் வெலிங்டனில் நடக்கிறது. ராணுவ மையத் தலைவர் பிரிகேடியர் சுரேஷ்குமார் தலைமை வகிக்கிறார்.

வெலிங்டன் ஏரியில் நடக்கும் குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச் சியில் பங்கேற்கிறார். வரும் 6, 7 தேதிகளில் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடக்கும் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

இதையொட்டி, வெலிங்டன் ராணுவ முகாம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப் பட்டுள்ளது.

ராணுவ அதிவிரைவுப் படையினர், போலீஸார் 140 பேரும், முகாமின் வெளிப்புறம் தமிழக சிறப்புப் போலீஸார், அதிவிரைவுப் படை போலீஸார் 110 பேரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 21 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வெலிங்டன் ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணி களுக்கும், ராணுவ முகாம் வழியாகச் செல்ல வாகனங்களுக் கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE