அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் மனு நிராகரிப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி வேளாண் அதிகாரி எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனுவை நெல்லை நீதிமன்றம் நிராகரித்தது.

ஏற்கெனவே, ஜாமீன் கேட்டு திருநெல்வேலி நீதிமன்றத்தில் செந்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி நசீர் அகமது சமீபத்தில் தள்ளுபடி செய்திருந்தார்.

இந்நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் நேற்று ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி நசீர் அகமது, வழக்கு விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்தார்.

முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20 ம் தேதி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கடந்த 4 ம் தேதி கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE