வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடையில் கைகொடுக்கும் கசிவுநீர் குட்டைகள்

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அமைக்கப் பட்டுள்ள கசிவுநீர் குட்டைகள் கோடைக்கால நீர்த் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.

இது தொடர்பாக பூங்காவின் இயக்குநர் கே.எஸ்.எஸ்.வி.பி.ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இப்பூங்கா பராமரிப்புக்கு தினந்தோறும் 5 லட்சம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. பூங்காவில் உள்ள திறந்தவெளிக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் 90 சதவீத நீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

பூங்காவின் நீர்த்தேவைக்கு நிலத்தடி நீரையே முழுவதும் நம்பியிருக்க வேண்டியுள்ளது. பூங்காவைச் சுற்றி நடைபெறும் நகரமயமாதலால் ஏற்படும் நிலத்தடி நீர்மட்டம் குறைவு, நிச்சயமற்ற பருவமழை போன்ற காரணங்களால் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மழைநீர் வழிந்தோடும் ஓடைகளின் குறுக்கே அடுத்தடுத்து 18 கசிவுநீர் குட்டைகள் அமைக்கப் பட்டன. இதன் மூலம் பூங்காவின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கிடைக்கும் மழைநீர் அனைத்தும் சேகரிக்கப் பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறை யாமல் இருக்க வழிவகை செய் யப்பட்டது. இந்த கசிவுநீர் குட்டை களின் மொத்த கொள்ளளவு 22 கோடியே 5 லட்சம் லிட்டர். இவை பூங்காவின் கோடைக்கால நீர் தட்டுப்பாட்டை போக்குவதுடன், வனப்பகுதியில் வாழ்ந்து வரும் பல உயிரினங்களுக்கு நீர் ஆதாரமாகவும் மாறியுள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்