கிருஷ்ணகிரியில் 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே மாநில எல்லையான அத்திப்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து கர்நாடகா மாநிலத்துக்கு லாரியில் கடத்தி சென்ற 8 டன் அளவிலான 160 ரேசன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறையினர் மடக்கி பிடித்தனர்.

ரேசன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒசூர் வழியாக கர்நாடகா மாநிலத்துக்கு அனுமதியின்றி தினந்தோறும் லாரிகளில் அரிசி கடத்தப்பட்டடு வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை வருவாய்த்துறையினர் ஒசூர் அடுத்த ஜுஜுவாடி மாநில எல்லைப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கேண்டர் லாரியை நிறுத்தியுள்ளனர். லாரி ஒட்டுநர் நிறுத்தாமல் வேகமாக சென்றதால் சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது கேண்டர் லாரியில் 160 ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து லாரியில் இருந்த ஒட்டுநர், கிளீனர் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து இந்த ரேசன் அரிசி மூட்டைகள் கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தி கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

இதனையடுத்து 8 டன் ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் கேண்டர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர். ரேசன் அரிசியை கடத்தி சென்ற இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் மற்றும் குமார் ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்