அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் கொலையில் 17-வது குற்றவாளி கைது: போலீஸ் தீவிர விசாரணை

அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் கொலையில் 17-வது குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ்குமார் (47). திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்து வந்தார். கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையல் அருகில் இவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இது தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி பிரமுகர் கொலையில் 16 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி சென்னை மண்ணடியை சேர்ந்த அப்துல்லா என்ற இளைஞருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கொலையில் 17-வது குற்றவாளியாக அப்துல்லா சேர்க்கப்பட்டார். அவரை கைது செய்ய பல மாதங்களாக போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அப்துல்லாவை போலீஸார் கைது செய்தனர். அப்துல்லாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டு 9 மாதத் துக்கு பிறகு அப்துல்லா கைது செய் யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE