அங்கீகாரமில்லாமல் செயல்படும் 550 காட்டேஜ்கள்: கொடைக்கானல் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி இழப்பு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத, அரசு அங்கீகாரமில்லாத 550 காட்டேஜ்கள் செயல்படுவதாகவும், அதனால் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

கொடைக்கானலில், தற்போது கோடை சீசன் களைகட்டத் தொடங்கி விட்டது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ஹோட்டல்கள், காட்டேஜ்கள், ரிசார்ட்டுகளில் அறைகள் கிடைக்கா மல் சுற்றுலாப் பயணிகள் பரிதவிக் கின்றனர். இவர்களைக் குறிவைத்து கொடைக்கானல் ஏரி, பில்டிங் சொசைட்டி, அட்டுவம்பட்டி, நாயுடு புரம், எம்.என்.நகர், பாம்பாறுகுளம், வட்டக்கானல் உள்ளிட்ட பகுதியில் அரசு அங்கீகாரமில்லாமல் 550 காட்டேஜ்கள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

அதனால், கடந்த வாரம் திண்டுக் கல் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரி ஹரன் உத்தரவின்பேரில் கொடைக் கானல் ஆர்.டி.ஓ. சுரேஷ் தலைமையில் நகராட்சி, சுகாதாரத் துறை, வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதில் அங்கீகார மில்லாத காட்டேஜ்களுக்கு அதிகாரி கள் நோட்டீஸ் வழங்கி அங்கீகாரம் பெறவும், அங்கீகாரம் பெறாவிட்டால் காட்டேஜ்களை மூடவும் உத்தர விட்டனர்.

தற்போது சில அரசியல் வாதிகளின் தலையீட்டால் அங்கீகார மில்லாத காட்டேஜ்கள் மீது நட வடிக்கை எடுப்பதில் அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

இதுகுறித்து கொடைக்கானல் ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் அப்துல்கனி ராஜா கூறிய தாவது: கொடைக்கானலில் அரசு அங்கீகாரம் பெற்று 150 ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், காட்டேஜ்கள் மட்டுமே செயல்படுகின்றன. அங்கீகாரம் இல்லாமல் வீடுகள், பங்களாக்கள் போல் கட்டி வெளிநாட்டினருக்கு நிரந்தரமாகவும், சீசன் நேரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கும் வாட கைக்கு விடுகின்றனர். ரசீதும் வழங்கு வதில்லை.

இந்த காட்டேஜ்களில் போதை காளான், போதை ஆம்லெட், பாலியல் தொழில் உள்ளிட்ட பல் வேறு சட்டவிரோத செயல்கள் நடை பெறுகின்றன. ஹோட்டல், காட்டேஜ் கள் நடத்த நகராட்சி, சுகாதாரத் துறை, தீயணைப்புத் துறை, மின்சாரத் துறை ஆகியவற்றின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். சொத்து வரி, தொழில் வரி, விற்பனை வரி, சேவை வரி உள்ளிட்டவற்றை செலுத்த வேண்டும்.

ஆனால் அங்கீகாரமில்லாத காட்டேஜ்கள் வீடுகளுக்கு உண்டான வரிகளை மட்டுமே செலுத்துகின்றன. அதனால், நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, அங்கீகாரமில்லாத காட்டேஜ்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துவதுடன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து வரும் 7-ம் தேதி நடக்கும் கொடைக்கானல் ஹோட்டல் உரிமை யாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

இதுகுறித்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ. சுரேஷ் கூறுகையில், அங்கீகாரமில்லாத காட்டேஜ்கள் அங்கீகாரம் பெற அளிக்கப்பட்ட காலஅவகாசம் இன்னும் முடிய வில்லை என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE