ஆழ்துளை கிணறுகள் பராமரிப்பு தொடர்பான விதிமுறைகளை உருவாக்கக் கோரி வழக்கு: 4 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆழ்துளை கிணறுகள் அமைப் பது, பயனற்ற ஆழ்துளை கிணறு கள் மற்றும் கிணறுகளை மூடி வைப்பது தொடர்பான விதிமுறைகளை உருவாக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.சிவகாமி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

பயனற்ற ஆழ்துளை கிணற் றில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அங்கொன் றும் இங்கொன்றுமாக நடக்கிறது. அண்மையில் வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே பயனற்றுக் கிடந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த தமிழரசன் என்ற இரண் டரை வயது குழந்தை இறந்தது. இத்தகைய வழக்குகளில் குற்ற வாளிகள் எளிதில் விடுதலையாகி விடுகின்றனர். தண்டனை பெறு வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவையடுத்து, ஆழ் துளை கிணறுகள் அமைப்பது, பயனற்ற ஆழ்துளை கிணறுகள் மற்றும் கிணறுகளை மூடி வைப்பது தொடர்பாக தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994, சென்னை நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னை பெரு நகர் பகுதி நிலத்தடி நீர் (ஒழுங் காற்று) திருத்தச் சட்டம் 2014 கொண்டு வரப்பட்டது. ஆனால், அந் தச் சட்டங்களை அமல்படுத் தத் தேவையான விதிமுறைகள் இன்னமும் உருவாக்கப்பட வில்லை. எனவே, விதிமுறைகளை உருவாக்கி, விரைவில் அறிவிக்கை வெளியிடவும், ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த தமிழரசனின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதி பதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோ ரைக் கொண்ட முதல் அமர்வு, ‘‘ஆழ்துளை கிணறுகள் அமைப் பது, பயனற்ற ஆழ்துளை கிணறு கள் மற்றும் கிணறுகளை மூடி வைப்பது தொடர்பான சட்ட விதிமுறைகளை உருவாக்குவது குறித்து 4 வாரங்களுக்குள் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆற்காட் டில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவ னின் பெற்றோருக்கு இடைக் கால நிவாரணம் ஏதாவது வழங்கப்பட்டிருந்தால் அது குறித்து தெரிவிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE