சொகுசு கார் இறக்குமதி வரிஏய்ப்பு விவகாரத்தில் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக் கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலத்தை சென்னையில் திங்கள் கிழமை சிபிஐ கைது செய்தது.
ஹைதராபாதை சேர்ந்த தொழிலதிபர் அலெக்ஸ் ஜோசப் வெளிநாடுகளில் இருந்து கார்களை இறக்குமதி செய்து சென்னையில் உள்ள தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுக்கு விற்பனை செய்து வந்தார்.
இந்த வகையில் பெரும் வரிஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 11 மாதங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 33 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் சிபிஐ கடந்த வாரம் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர். வெங்கடாசலம் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் சென்னையில் திங்கள்கிழமை அவரை கைது செய்து சிபிஐ விசாரித்தது. அலெக்ஸ் ஜோசப்பிடம் இருந்து 7 சொகுசு கார்களை வெங்கடாசலம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ராமச்சந்திரா பல்கலைக் கழக வட்டாரங்கள் கூறியபோது, அலெக்ஸ் ஜோசப்பிடம் இருந்து வெங்கடாசலம் கார்களை வாங்கவில்லை. வேறொருவரிடம் இருந்துதான் கார்களை வாங்கினார் என்று தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago