தனுஷ்கோடிக்கு வந்த ஒரே குடும்பத்தின் 5 அகதிகள் கைது

By எஸ்.முஹம்மது ராஃபி

இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இலங்கை திரிகோணமலை மாவட்டம் சம்பகிராமம் பகுதியை சார்ந்தவர் சத்தியசீலன் (50). இவர் தனது மனைவி பரமேஸ்வரி (45), மகள்கள் மேரி (19), அஞ்சலிதேவி (15) , விடுதலை செல்வி (13)ஆகியோருடன் வெள்ளிக்கிழமை அதிகாலை தனுஷ்கோடி அரிச்சமுனை கடற்பகுதியில் அகதியாக வந்திறங்கினார். பின்னர் தனுஷ்கோடி காவல்துறையினர் 5 பேரையும் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இலங்கை உள்நாட்டு போரினால் கடந்த 1999ல் தமிழகத்திற்கு அகதியாக வந்த சத்தியசீலன் தமது குடும்பத்தினருடன் மே மாதம் 2009க்கு பின்னர் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் இலங்கை சென்றார்.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் இலங்கை அரசினால் எத்தகைய அடிப்படை வசதிகளும் தமது குடும்பத்தினருக்கு செய்து தரவில்லை எனவும் வாழ்வாதாரம் இல்லாத நிலையில் மீண்டும் தமிழகத்திற்கு அகதிகளாக குடும்பத்தினருடன் வந்ததாக காவல்துறையினரின் விசாரணையில் சத்தியசீலன் கூறினார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடான யுத்தம் முடிவடைந்த இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாக கடந்த மே 19, 2009-ல் ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் தமிழர்கள் அதிகமாக வாழக்கூடிய வடகிழக்கு பகுதிகளில் ராணுவமயமாக தான் உள்ளது. இதனால் இலங்கையில் இருந்து அகதிகள் ராமேசுவரம் வருவது தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது.

தற்போது இலங்கையில் இருந்து அகதிகள் தமிழகம் வந்தால் அவர்களை முகாம்களுக்கு கொண்டு செல்லாமல் பாஸ்போர்ட் ஆவணச் சட்டத்தின் கீழும், சட்ட விரோதமாக வந்ததாகவும் கூறி வழக்குப் பதிந்து தமிழக காவல்துறையினர் சிறைகளில் அடைக்கிறனர்.

சொந்த நாட்டில் வாழ வழியில்லாமல் அகதிகளாக வருபவர்களை சிறையில் அடைக்காமல் முன்பு போலவே முகாம்களில் தங்க வைக்க வேண்டும். மேலும் 2010ம் ஆண்டுக்கு பின்னர் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அகதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இலங்கையில் அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியடைந்து புதிய அதிபராக சிறிசேனா ஆட்சியில் வந்துள்ள சூழலில் ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் தமிழகத்திற்கு அதிகளாக வருவது இதுவே முதல்முறையாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்