மணல் கொள்ளையில் ஈடுபட்டதால் அதிமுக ஆத்தூர் ஒன்றியத் தலைவர் உட்பட 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம், அதிமுக வின் ஆத்தூர் ஒன்றியத் தலை வராக இருப்பவர் கோபி. தற்போது ஆத்தூர் ஒன்றிய அதிமுக தொகுதி இணைச் செயலாளராகவும் உள் ளார். சாதாரண நிர்வாகியாக இருந்த கோபி, ஒன்றியத் தலைவர் ஆனதும், மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் அவரது உற வினரிடம் நெருக்கத்தை ஏற்படுத் திக் கொண்டார். இந்தச் செல் வாக்கைப் பயன்படுத்தி, ஆத்தூர் காமராஜர் அணை, குளங்களில் கோபி மற்றும் அவரது ஆட்கள் இரவு, பகலாக டிராக்டர், லாரி களில் பகிரங்கமாக மணல் கொள் ளையில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

இந்தக் கடத்தல் மணலை ஒப்பந்த தாரர்கள் மூலம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக் கட்டிடப் பணிகளுக்கு கோபி தொடர்ந்து பயன்படுத்தி, லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆத் தூர் கிராம நிர்வாக அலுவலர் நிர்மலா அளித்த புகாரின்பேரில் செம்பட்டி போலீஸார் நேற்று கோபி மற்றும் அவரது ஆட்கள் இருவரை கைது செய் தனர். மூவரையும் வேடச்சந்தூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தி, திண்டுக்கல் கிளைச் சிறையில் அடைத்தனர்.

கைது பின்னணி விவகாரம்

கோபியின் மணல் கடத்தலால் ஆத்தூர் பகுதியில் உள்ள புல் வெட்டி கண்மாய், செங்குளம், கருங் குளம், நடுக்குளம், மருதாணி குளம் உள்ளிட்ட 10 குளங்கள் தற்போது தண்ணீர் இல்லாமல் போய்விட்டன. ஆனால், போலீஸாரும் வருவாய்த் துறையினரும் கோபி யின் மணல் கொள்ளைக்கு சாதக மாகச் செயல்பட்டு வந்துள்ளனர். அதனால், கோபியின் எதிர் கோஷ்டியினர், மணல் கடத்த லில் கோபி நேரடியாக ஈடுபட்ட தற்கான முக்கிய புகைப்பட ஆதாரங் களைத் திரட்டி, அவரது சமீப கால நடவடிக்கைகள் குறித்தும் கட்சி மேலிடத்துக்கும், போயஸ் கார்டனுக்கும் அனுப்பி வைத்துள் ளனர். அதன் அடிப்படையில், கோபியை கட்சித் தலைமை நேற்று முன்தினம் விசாரணைக்கு அழைத்துள்ளது.

விசாரணை முடிந்து சென் னையில் இருந்து இரவு திண்டுக் கல்லுக்கு புறப்பட்டு வந்தபோது திருச்சி ரயில் நிலையத்தில் வைத்து போலீஸார் கோபியைக் கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்