கடல்சார் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு: மே 9-ல் பொது நுழைவுத்தேர்வு

சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்திலும், மும்பை, விசாகப்பட்டினம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள அதன் வளாகங்களிலும் பிஎஸ்சி (நாட்டிக்கல் சயின்ஸ்), டிப்ளமோ நாட்டிக்கல் சயின்ஸ், பிஎஸ்சி (கப்பல் கட்டுதல்), பி.டெக். (மரைன் என்ஜினியரிங்) எம்.டெக். எம்பிஏ (துறைமுகம் மற்றும் கப்பல் மேலாண்மை) உள்பட பல்வேறு கடல்சார் தொழில்நுட்ப படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இவற்றில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வு மே மாதம் 9-ம் தேதி சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், மாணவர்களின் வசதிக்காக விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஏப்ரல் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இந்திய கடல்சார் பல்கலைக்கழக பதிவாளர் சி.மோகன் அறிவித்துள்ளார்.

டிப்ளமா மற்றும் பட்டப் படிப்புகளுக்கு பிளஸ் டூ மாணவர்களும், முதுநிலை படிப்புகளுக்கு பட்டதாரிகளும் பொது நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் (www.imu.edu.in) விண்ணப்பிக்கலாம்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்