ஆந்திர முதல்வர் மனைவியின் தொழிற்சாலை முற்றுகை

தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை கண்டித்து, வடமதுரை அருகே ஆந்திர முதல்வரின் மனைவிக்குச் சொந்தமான பால்பொருள் தயா ரிப்பு தொழிற்சாலையை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், மோர்பட்டி பகுதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரிக்கு சொந்தமான பால் பொருள் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. ஆந்திர மாநிலத்தில் 20 தமிழக தொழிலாளர்கள் அம்மாநில போலீஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து, இந்த ஆலைக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்கள் மறு மலர்ச்சி கழகத்தின் நிறுவனத் தலைவர் முருகேசன் தலைமை யில், அந்த அமைப்பைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் தொழிற் சாலையை நேற்று முற்றுகை யிட்டனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய போலீ ஸாரை கைதுசெய்ய வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, ஆந்திர அரசு சார்பில் தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE