திருத்தணியில் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

விசைத் தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் துணிகளை கொள்முதல் செய்ய திருத்தணியில் கொள்முதல் நிலையம் ஒன்றை அரசு அமைக்கவேண்டும் என திருவள்ளூர் மாவட்ட விசைத்தறி நெசவாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள அமையார்குப்பத்தில், திருவள் ளூர் மாவட்ட விசைத்தறி நெசவாளர் வாழ்வுரிமை கோரிக்கை மாநாடு, நேற்று முன்தினம் மாலை நடை பெற்றது.

இதில், சங்கத்தின் மாநில செயலாளர் சந்திரன், மாவட்ட தலைவர் சோமசுந்தரம், செயலாளர் கணேசன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராஜேந் திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விசைத் தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் துணிகளை கொள்முதல் செய்ய திருத்தணி யில் கொள்முதல் நிலையம் ஒன்றை அரசு அமைக்கவேண் டும், விசைத்தறி நெசவாளர் களுக்கு வங்கியில் வட்டியில்லா கடன் வழங்கவேண்டும், தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE