போராட்டம் நடத்துவோர் மீது தமிழக அரசு அடக்குமுறை: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

மாற்றுத்திறனாளிகள், சத்துணவு ஊழியர்கள் என போராடுபவர்களை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசு அடக்குமுறையைக் கையாள் கிறது என்று தமிழக பாஜக தலை வர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

பாஜக சார்பில் 12 மாவட்டங் களின் மையக்குழு உறுப்பினர்கள் கூட்டம் மதுரையில் நேற்று நடை பெற்றது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கிரானைட், பால், அரிசியில் கலப்படம், மீனவருக்கு வழங்கப்படும் டீசல் என அனைத் திலும் ஊழல் நடந்து வருகிறது. அரசு யாரையும் தொடர்பு கொள்வதில்லை. மக்களாலும் அரசை தொடர்புகொள்ள முடியாத நிலைதான் உள்ளது.

மிஸ்டு கால் மூலம் பாஜகவில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க கட்சியினர் வீடு, வீடாகச் செல்வர். அப்போது மத்திய அரசின் சாதனை கள், தமிழக அரசின் ஊழல்கள் குறித்து விரிவாக விளக்கி மக்களிடம் ஆதரவு திரட்டுவர்.

மே மாதம் முதல் சனிக்கிழமை தோறும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறும். மாநில அரசு தொடர்பாக வரும் கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பப்படும். நடவ டிக்கை இல்லையெனில் போராட் டம் நடத்துவோம்.

வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய் யும் அளவுக்கு நிலைமை மோச மானதால் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும். தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது.

காங்கிரஸார் அவதூறு

அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேரவுள்ளதாக காங்கிரஸ் கட்சி யினர் திட்டமிட்டு தவறான தகவலை பரப்பி வருவது கண்டனத்துக் குரியது. முதலில் அவர்களுக் கிடையே உள்ள மோதலை தீர்க்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE