‘தி இந்து’ வேலைவாய்ப்பு வழிகாட்டி கண்காட்சி தொடங்கியது: ஆர்வத்தோடு பங்கேற்ற மாணவ, மாணவிகள்

மாணவ, மாணவிகளின் உயர்கல் விக்கும் வேலைவாய்ப்புக்கும் வழி காட்டும் ‘தி இந்து’ வேலைவாய்ப்பு வழிகாட்டி கண்காட்சி, சென்னை யில் நேற்று தொடங்கியது.

பள்ளி, கல்லூரி மாணவர் களின் மேற்படிப்புக்கும், வேலை வாய்ப்புக்கும் வழிகாட்டும் வகை யில் ‘தி இந்து - எஜுகேஷன் பிளஸ்’ சார்பில் 2 நாள் வேலைவாய்ப்பு வழிகாட்டி கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த் தக மையத்தில் நேற்று தொடங் கியது. அமெட், பாரத், இந்துஸ் தான், வேல்ஸ் ஆகிய பல்கலைக் கழங்களுடன் இணைந்து நடத்தப் படும் இந்த கல்விக் கண்காட்சியை கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராஜீவ் சி.லோச்சன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சிக்கு விஐடி பல்கலைக் கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசும்போது, ‘‘இந்தியாவில் 760 பல்கலைக் கழகங்களும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளும் உள்ளன. இங்கு உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை 20 சதவீதம் மட் டுமே. முன்னேறிய நாடுகளில் இந்த எண்ணிக்கை 60 சதவீதத்துக்குமேல் உள்ளது. அமெரிக்காவில் 95 சதவீதம்பேர் உயர்கல்வி பெறுகின்ற னர். நம் நாட்டில் குறைந்தபட்சம் 40 சதவீதம் பேராவது உயர்கல்விக்கு செல்லக்கூடிய சூழல் உருவாக வேண்டும். மொத்த உள்நாட்டு உற் பத்தியில் (ஜிடிபி) 6 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்க வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்’’ என்றார்.

சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி பேசும்போது, ‘‘இப்போது ஏராள மான வாய்ப்புகளும், புதிய படிப்பு களும் உள்ளன. படிப்பை தேர்வு செய்வதில் குழப்பமும், மனஅழுத் தமும் உருவாகிறது. மாணவர்கள் தங்களுக்கு எந்தப் படிப்பின் மீது நாட்டம் இருக்கிறதோ அதை தேர்வுசெய்து உற்சாகத்தோடு படிக்க வேண்டும். படிப்பின் மீதான ஆர்வமும், கடின உழைப்பும் வெற்றிக்கு வழிவகுக்கும்’’ என்றார்.

கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவன இயக்குநர் நிர்மலா லட்சு மணன் சிறப்புரையாற்றி பேசும் போது, “உயர்கல்வி, வேலை வாய்ப்புகள் தொடர்பான சந்தேகங் களை கல்வியாளர்கள் மற்றும் கல் லூரிகளின் நிர்வாகிகளிடம் மாண வர்கள் கேட்டு தெரிந்துகொள்ள இந்தக் கண்காட்சி அருமையான ஒரு வாய்ப்பு’’ என்று குறிப்பிட்டார்.

‘தி நெக்ஸ்ட் ஸ்டெப்’ என்ற பெயரில் ‘தி இந்து’வின் உயர்கல்வி வழிகாட்டி கையேட்டை ஐஐடி இயக் குநர் பாஸ்கர் ராமமூர்த்தி வெளி யிட, முதல் பிரதியை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பெற்றுக்கொண் டார். மருத்துவம், பொறியியல் துறை வேலைவாய்ப்பு குறித்து கல்வி யாளர் ஜெயபிரகாஷ் காந்தியும், ஏரோநாட்டிக்கல் துறை வேலை வாய்ப்புகள் பற்றி இந்துஸ்தான் பல்கலைக்கழக பேராசிரியர் திலிப் ஷாவும் உரையாற்றினர்.

தொடக்க நாளான நேற்று ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் மிகுந்த ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முடி வடைகிறது. காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE