தமிழக - ஆந்திர எல்லையில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு

By செய்திப்பிரிவு

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்க கால்நடை பராமரிப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள பெத்திக்குப்பம், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சோதனை சாவடியில், பறவைக்காய்ச்சல் நோய் தடுப்புக்கான நிரந்தர சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனைச் சாவடி வழியாக, தெலங்கானா மற்றும் ஆந்திர பகுதிகளிலிருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும், கிருமி நாசினி தெளிக்கும் பணியை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சின்னையா, பால்வளத்துறை அமைச்சர் ரமணா ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது, கால்நடை பரா மரிப்புத்துறை மற்றும் மருத் துவப் பணிகளுக்கான இயக்கு னர் ஆபிரகாம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 இடங்களில், பறவைக் காய்ச்சல் நோய் தடுப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரம் இயங்கும் இந்த சோதனைச் சாவடிகளில், தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்களில் வாத்துகள், கோழிகள், முட்டைகள், கோழித் தீவனங்கள், இறைச்சி கழிவுகள் இருந்தால், அதனை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE